மேற்கு வங்காளத்தில் பயங்கரம்: திரிணாமூல் கட்சி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு! 2 பேர் பலி

மினாட்பூர்:

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள  திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தில் அங்கிருந்த  2 பேர் பலி பலியானார்கள். மேலும் 5 பேர் காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேற்குவங்கம்,  மார்கரம்பூர் கிராமத்தில் உள்ள நாராயங்கர் தெஹ்ஸில்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று கட்சி தொடர்பாக கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,  இன்று காலை திரிணாமூல் கட்சித் தொண்டர்கள், கட்சி  அலுவலகத்தில் நுழைவதற்கு கதவுகளைத் திறந்த போது, பயங்கரமாக குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் காயமடைந்த 5 பேர் அருகிலுள்ள மிட்னாபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

You may have missed