டெல்லி: 2021ம்ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை  இன்று அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தொகுதி தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கு சவால் விடுக்கும் வகையில் பாஜகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், மாநிலத்தில், கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை  தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி  தோல்வி அடைந்தது. இந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.