மேற்குவங்க சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் குழு அமைப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

.மேற்குவங்கத்துக்கு சட்டசபை தேர்தல் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில் இம்முறை காங்கிரஸ்,  இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

இந் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 92 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

குழுவின் தலைவராக ஜே.பி.அகர்வால், உறுப்பினர்களாக டாக்டர்.மகேஷ் ஜோஷி, நசிம் கான், ஜிதின் பிரசாத், அதிர் ரஞ்சன் செளதரி, அப்துல் மன்னன் மற்றும் மேற்குவங்க காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டு உள்ளார்.