மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் , உடன்பாடு செய்துகொள்ள அந்த மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து மாநில அளவில் இரு தரப்பும் பேச்சு நடத்தி, தொகுதி பங்கீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.
டெல்லியில் நாளை தொடங்கி இரு நாட்கள் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் , உடன்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
சூழ்நிலைக்கு ஏற்ப மாநில கமிட்டிகளே தேர்தல் கூட்டணி குறித்து தீர்மானிக்கலாம் என இதற்கு முன்னர் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு சம்மதம் வழங்கியுள்ளது.
எனவே டெல்லியில் இரு நாட்கள் நடக்கும் கூட்டத்தில், காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்வது என்ற ,மே.வங்க மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவுக்கு முறையான ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.
பீகாரில் தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் , ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இடதுசாரிகள் தொகுதி பங்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-பா.பாரதி.