மேற்குவங்க மாநில பெயரை  மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநில பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேறியது.

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயர் டபிள்யூ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குகிறது. இதனால் அகர வரிசையில் மாநில பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதனால் இதை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

3 மொழிகளில் ‘பங்களா’ எனவும், ஆங்கிலம், இந்தியில் ‘பெங்காலி’ எனவும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் மேற்குவங்க சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘பங்களா’ என பெங்காலியிலும், ‘பெங்கால்’ என ஆங்கிலத்திலும், ‘பங்கால்’ என இந்தியிலும் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. 2011ம் ஆண்டில் ‘பஸ்சிம் பங்கோ’ என மாற்ற வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையையும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.