புதிய சுகாதார திட்ட அட்டை பெற மாநில மக்களுடன் வரிசையில் நின்ற முதல்வர் மம்தா பானர்ஜி… வீடியோ

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில்,  மாநில மக்களுக்கு புதிய சுகாதாரத்திட்டத்தை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். இந்த சுகாதாரத் திட்டத்துக்கான அடையாள அட்டையான (Swasthya Saathi card) பெற மக்களோடு மக்களாக முதல்வர் மம்தா பானர்ஜி, வரிசையில் நின்று அட்டை பெற்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபத்தில், மாநில மக்களுக்கு புதிய சுகாதாரத் திட்டத்தை அறிவித்தார்.  அதைத்தொடர்ந்து, பயனர்களுக்கு ஸ்வஸ்திய சாதி அட்டை (Swasthya Saathi card)  வழங்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. 

இந்த நிலையில், சுகாதார அட்டை வழங்கும் இடத்துக்கு திடீரென விஜயம் செய்த முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு பயனர்களுடன் சேர்ந்து காத்திருந்தவர், பின்னர் அடையாள அட்டை பெற்று சென்ற காட்சி தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது.