மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா :

ம்பன் புயல் தாக்கத்தால் சீர்குலைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆய்வு நடத்த பிரதமர் மோடி இன்று சென்றிருந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, மூன்று மாதங்கள் கழித்து முதல்முறை வெளிமாநில பயணமாக இன்று கொல்கத்தா சென்றார்.

 

அப்போது விமான நிலையத்தில், அவரை வரவேற்க மாநில ஆளுநர், உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் காத்திருந்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும், பிரதமர் விமானத்தில் இருந்து இறங்கி வருவதை கவனிக்காமல் தனது கையில் ஏதோ ஆவணத்தை வைத்து பார்த்துக் கொண்டிருந்தது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரதமர் வ்ருவதை கூட பொருட்படுத்தாமல் இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும் என்று சமூக வலைதளத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

You may have missed