கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார்.

நாட்டில் கொரோனா 2வது அலையின் காரணமாக பாதிப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி இருப்பதாவது: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உத்தரப் பிரதேசத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டியதை திருப்பிவிட்டால் ஆக்சிஜனுக்கு நாங்கள் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.