Random image

முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இத்தாலிக்கு மம்தா பயணம்

கொல்கத்தா:

வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து ஜெர்மனில இத்தாலிக்கு வருமாறு அந்நாட்டு நிறுவன உரிமையாளர்கள் மம்தாவுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து இன்று கொல்கத்தாவில் இருந்து மம்தா ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டு சென்றார். ஜெர்மனி சென்றடையும் அவர் அங்கிருந்து இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு செல்கிறார்.

இருநாடுகளிலும் 12 நாள் சுற்றுப்பயணம் செய்து முதலீடுகளை திரட்டும் மம்தா, வரும் 28-ம் தேதி கொல்கத்தா திரும்புவார். மம்தாவுடன் தலைமை செயலாளர் மலய் டேய், நிதிமந்திரி அமித் மித்ரா, நிதித்துறை செயலாளர் திவேதி ஆகியோரும் சென்றுள்ளனர்.