மேற்குவங்க தேர்தல் – புதிய கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இரவு 7 மணி முதல், காலை 10 மணிவரை ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களுக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மேற்குவங்கத்தில், இன்னும் சிலகட்ட தேர்தல்கள் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

மேலும், எஞ்சிய தேர்தல்களுக்கான சைலன்ஸ் காலகட்டம் என்ற கட்டுப்பாடு, 48 மணிநேரத்திலிருந்து 72 மணிநேரம் என்பதாக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.