மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு பேச காங்கிரஸ் குழு அமைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம், தமிழகம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக கடந்த மாதம் அறிவித்தது.

இந் நிலையில், இடதுசாரிகளுடன் தொகுதிகள் பங்கீடு குறித்து முடிவு செய்ய  ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அப்துல் மன்னன், பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் நேபாள் மகாடோ ஆகியோர் அடங்கிய குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.