கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில்,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி  சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது. அதன்படி, மாநிலத்தில் மொத்முள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், நந்திகிராம் தொகுதியில் மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல்  மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேறகுவங்க மாநிலத்தில் பாஜகவுக்கும், மம்தா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆட்சி தக்க வைத்துள்ள மம்தாவும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் தீவிரமாக மோதி வருகிறது. இதற்கிடையில்  காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி 3வது அணியா களமிறங்கி உள்ளது. இதனால், மேற்குவங்க அரசியல் களத்தில் நிற்பதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.  மாநிலத்தில் மொத்த சட்டமன்ற தொகுதிகள்  294 ஆக உளள் நிலையில்,  291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்டியலை வெளியிட்டு பேசிய மம்தா,  மேற்குவங்கத்தின் வடக்குப் பகுதியின் மூன்று தொகுதிகளில் எங்கள் கட்சி களமிறங்கப் போவதில்லை. நான் நந்திகிராம் தொகுதியில் களமிறங்குகிறேன். பவானிபூர் தொகுதியில் சோபன்தேப் சட்டோபாத்யாய் போட்டியிடவுள்ளார் என்றார்.

இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில்  கலை, விளையாட்டு, மீடியா, கலாச்சாரத் துறை சார்ந்த பிரபலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில்   50 பேர் பெண்கள்,  மேலும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த  42 பேரும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த இரண்டு முறை பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இம்முறை நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடவுள்ளார். இவர் தான் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர், தற்போது பாஜகவில் ஐக்கியமாகி, மம்தாவுக்கு எதிராக களமிறங்குகிறார்.