மற்ற மாநில தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1000! மம்தா அசத்தல்…

கொல்கத்தா:

ல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர் தொழிலாளர்கள் ஊரங்கால் சொந் தஊருக்கு திரும்ப முடியாமல் , மேற்குவங்காளத்தில் சிக்கிய உள்ள நிலையில், அவர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உளளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள், கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  மேற்குவங்க மாநிலத்துக்கு வேலை தேடிச் சென்றவர்கள் பலர் பணமில்லாமல், உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. ரூ.1,000 வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.   அவரது இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.