டில்லி,

பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பீகார் மாநில ஆளுநர் பொறுப்பு மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு  கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது..

பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்த், பாரதியஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பா.ஜ. தலைவர் அமித்ஷாவை சந்தித்த் கோவிந்த், பீகார் மாநில ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கு முறைப்படி கடிதம் எழுதினார்.

அவருடைய ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு, மேற்குவங்க மாநில ஆளுநர் கைலாஷ் நாத் திரிபாதிக்கு கூடுதல் பொறுப்பாக பீகார் மாநில பொறுப்பை கொடுத்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.