கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. ஆகையால் சில தளர்வுகளை அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். அதன்படி, இன்று அதற்கான அறிவிப்பினை அவர் தெரிவித்தார்.

அதில், மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். திருவிழா தினங்களில் பொதுமுடக்கம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆகஸ்டு 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், அந்த தினம் பொதுமுடக்கம் அமலில் இருக்காது என்றும் மமதா பானர்ஜி  கூறியுள்ளார்.