மேற்கு வங்கம்:
ம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசு 28-ஆம் தேதி இருந்த முழு அடைப்பை வாபஸ் பெற்று அதற்கு பதிலாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஊரடங்கை நேற்று அறிவித்தது.
பல்வேறு கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் இது என்று மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.
 இதன் விளைவாகத்தான் முழு அடைப்பில் தேதிகள் இந்த மாதத்தில் மீண்டும் திருத்தப்பட்டன. இந்த மாத கொரோனா வைரஸ் முழுஅடைப்பின் தேதிகள் மேற்குவங்க அரசால் நான்காவது முறையாக திருத்தப்படுகிறது.   ஆகையால் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் முழு அடைப்பு ஆகஸ்ட் 20, 21, 27 மற்றும் 3-ஆம் தேதிகளில் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாள் முழு அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக வணிகங்கள் மற்றும் வங்கிகள் மிகவும் பாதிக்கப்பட்டதாலும், இவ்வாறான முழு அடைப்பு அவர்களை மிகவும் சிரமத்துக்குள்ளாகுவதாக, அவர்கள் வைத்த கோரிக்கையின் பெயரிலும் முழுஅடைப்பு திருடப்பட்டதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.