கொல்கத்தா

ழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக சிறை வாசிகள் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த 2002 ஆ,ம் ஆண்டு உச்சநீதிமன்ற அமர்வு ஒரு வழக்கில் வழக்க்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்யவோ வழக்குகளை புறக்கணிக்கவோ உரிமை இல்லை என அறிவித்தது.   இந்த தீர்ப்புக்கு எதிராக இந்திய பார் கவுன்சில் கடந்த 17 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறது.    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

அதனால் சிறைகளில் கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர்.   கடந்த மாதம் 24 ஆம் தேதி டம்டம் சிறையில் மட்டும் ஒரே நாளில் 200 பேருக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர்.   டம்டம் சிறையில் சுமார் 2650 பேர் அடைத்து வைக்க முடியும்.  தற்போது அங்கு 3323 பேர் அடைக்கப்பட்டுள்ளன்ர்.   இந்நிலை அனைத்து சிறைச்சாலைகளிலும் தொடந்து வருகிறது.

இதைப் போல மாநில சிறப்பு சிறையில் 2140 பேருக்கு பதில் 2663 பேர் அடைக்கபட்டுள்ளனர்.  இதனால் புதிதாக கைது செய்யப்படுபவர்கள் பருய்பூர் சிறை மற்றும் ஹவுரா மாவட்ட சிறை ஆகிய இடங்களில் அடைத்து வைக்கப்படுகின்றன்ர்.   பரூய்பூர் சிறையில் 800 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1068 பேர் அடைக்கபட்டுள்ளனர்.   இதைப் போல் ஹவுரா மாவட்ட சிறையில் 460 பேர் இருக்க வேண்டிய நிலையில் 702 பேர் அடைக்கபட்டுள்ளனர்.

இதற்காக பல சிறைகளில் புதிய வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன.   ஆயினும் இது போன்ற தற்காலிக நடவடிக்கைகள் உதவாது என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.    இதற்கு முக்கிய காரணம் வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தம் ஆகும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ள்னர்.   வழக்கறிஞரகள் வேலை நிறுத்தம் காரணமாக கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது, விடுதலை ஆகிய எவ்வித நடவடிக்கைகளும் நடைபெறுவது இல்லை.