மே.வ: மோடி பேச்சுக்கு மவுசு இல்லை.. லேடி ஜெயிக்கிறார்

--

download (2)

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 199 இடங்களில் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல்  எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி காலை  10 மணி நிலவரப்படி 199 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 41 இடங்களிலும், இடதுசாரிகள் 38 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.  மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மமதா பானர்ஜியை கடுமையா விமர்சித்து  பேசினார்.

சாரதா ஊழல், நாரதா ஸ்டிங் ஆபரேஷன், கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து என்று மமதாவின் ஆட்சியில் நடந்தவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று  மோடி  பிரச்சாரம் செய்தார்.

ஆனால் அவரது பிரச்சாரம் மேற்கு வங்கத்தில் எடுபடவில்லை என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.