கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின்படி, திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த 14ந்தேதி மேற்குவங்காள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது பல இடங்களில் கலவரம், வாக்குச் சாவடி முற்றுகை, வாக்குச்சாவடிகள் உடைப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டனர்.

38,814 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நடைபெற்று முடிநத  இந்த தேர்தலில்  பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் பெரும்பாலான இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

மதியம் 12 மணி நிலரவப்படி, 1300-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பாரதிய ஜனதா 100 கிராம பஞ்சாயத்துகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

வாக்கு எண்ணிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருவது காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் தங்களது வெற்றியை பகிர்ந்து வருகின்றனர்.