ரத யாத்திரைக்கு தடை: பாஜ மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அரசு மேற்கொள்ள இருந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், தடையை எதிர்த்து பாஜக சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ததது. அத்துடன் வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க கோரியது.

ஆனால், உச்சநீதி மன்றம் பாஜக மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக பாஜக ரத யாத்திரை வரும் 28ந்தேதி நடைபெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில்  மேற்கு வங்க மாநிலத்தில்,  தேர்தல் பிரசாரமாக ரத யாத்திரை வரும் 28ந்தேதி முதல் 31ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.

ஆனால், ரத யாத்திரை காரணமாக வகுப்பு கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, மம்தா பானர்ஜி அரசு ரத யாத்திரைக்கு தடை விதித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கொல்கத்தா உயர்நீதி மன்றமும் பாஜக யாத்திரைக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் பாஜக சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. மனுவை உடனே விசாரிக்க கோரி முறையீடு செய்தது.

ஆனால், மனுவை உடனே விசாரிக்க முடியாது என்று மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை பட்டியலிட கூறி உள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ரத யாத்திரை நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bjp appeal petition, BJP's Rath Yatra, Kolkata High Court, supreme court, Supreme court denied, west bengal, உச்ச நீதி மன்றம் மறுப்பு, உச்சநீதி மன்றம், கொல்கத்தா உயர்நீதி மன்றம், பாஜ ரத யாத்திரை, பாஜக மேல்முறையீடு, மனு, மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம், மேல்முறையீடு...?
-=-