மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்த சட்ட முன்மொழிவை மேற்கு வங்க சட்டபேரவையில் ஆகஸ்ட் 26 அன்று தாக்கல் செய்யும் எனத் தெரியவந்துள்ளது.
west bengal west bengal 2
 
 
சமீப காலத்தில், பலவேறு  நாடு/ நகரங்களின் பெயர்  மாற்றப்பட்டுள்ளது.    செக்கியா ஆனது செக் குடியரசு .  குர்கவான் குருகிராம் ஆனது. ஹைதராபாத் பெயர் மாற்ற கோரிக்கை வத்தது பா.ஜ.க.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர்மாற்ற நேற்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் வரிசையில், தற்போது  மேற்கு வங்கத்தின் முறை. ஆம். மேஅற்கு வங்கத்தின் பெயரை மாற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதன் விவரம்:
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்த சட்ட முன்மொழிவை ஏற்றுக்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. இனி மேற்கு வங்கத்தின் பெயர் பெங்காலி மொழியில் இனி ‘ “போங்கோ” அல்லது ‘பாங்க்ளா ‘ என மாறக்கூடும்.
bengal
மற்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்” என்று இருக்கலாமெனத் தெரியவந்துள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சரவை உறுப்பினர் ஒருவர், ” மேற்கு வங்கத்தின் பெயர் மாற்ற மசோதாவை தாக்கல் செய்ய ஏதுவாக ஆகஸ்ட் 26 ம் தேதி மேற்குவங்க சட்டப் பேரவையின் விசேட கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் எனத் தெரிகின்றது.
அதனை அடுத்து, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தால், இந்தப் பெயர் மாற்றம் மாநிலங்கள் பட்டியல் அகர வரிசையில் 28 நிலையிலிருந்து 4 வது நிலைக்கு உயரும்.

mamata banerjee
மம்தா பாணர்ஜி

இதன் மூலம், பாராளுமன்றத்தில் மேர்கு வங்க மக்களவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும், பிரச்சினைகளை எழுப்பவும்  காலை வேளையிலேயே வாய்ப்பு கிடைக்கும்.
பெயர்ப்பட்டியலில் (W” for West Bengal) கடைசியில் இருப்பதால், மேற்கு வங்க உறுப்பினர்கள் பொதுவாய் மாலை நேரங்களில் பேசவே வாய்ப்பு கிடைக்கும். மாலை நேரத்தில் பல உறுப்பினர்கள் வெளியேறிவிடுவதால்  இருக்கைகள் காலியாய் இருக்கும்.
 
மம்தா தலைமையிலான ஆளும்கட்சிக்கு  பெரும்பான்மை இருப்பதால், இந்த பெயர் மாற்றம் நிகழ்வதில் தடையேதுமில்லை.