கிங்ஸ்டன்: எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகளுக்காக, காத்திருப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம்.

இந்தப் பட்டியலில், பிராவோ மற்றும் பொல்லார்டு போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த காத்திருப்பு பட்டியல் மூலம், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பல்வேறு திறன்களை உடைய தேவையான வீரர்களின் கையிருப்பு நிறைந்துள்ள நிலை உறுதிப்படுத்தப்படுவதுடன், மாற்று வீரர்கள் தேவைப்படும்போது, தகுதியானவர்களை உடனடியாக தேர்வுசெய்து கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கிந்திய அணி, வேகம் மிக்க இளம் வீரர்களுடன், அனுபவமும் பக்குவமும் உடைய மூத்த வீரர்களைக் கொண்டதாகவும் இருக்குமென அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

மே 19 முதல் 23ம் தேதி வரையில், செளதாம்ப்டன் நகரில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.