கெத்து காட்டிய ஹெட்மேயர் ! இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு

மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 323 ரன்களை இலக்காக

நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு

இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு

இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் 1.30  மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி  செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து மேற்கிந்திய அணி பேட்டிங் செய்யத்துவங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சந்திரபால் ஹேம்ராஜ் மற்றும் கெரோன் போவல் களமிறங்கனர்.

9 ரன்களில் சந்திரபால் ஹேம்ராஜ் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் போவலுடன்  மற்றும் ஹோப் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

ஹோப் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து தனது 200 ஆவது போட்டியில் களமிறங்கிய மர்லான்

சாமுவேல்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பிறகு ஹெட்மேயர் மற்றும் பவுல் ஜோடி பொறுமையாக விளையாடியது.

பவுல் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் ஹெட்மேயர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

ஹெட்மேயருடன் இணைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டரும் ரன்களை குவிக்கத் துவங்கினார்

இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை விளாசித் தள்ளிய ஹெட்மேயர் 78 பந்துகளில் 106 ரன்களை சேர்த்த போது ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

ஹெட்மேயர் மொத்தம் 6 பவுன்டரிகள் 6 சிக்ஸர்கள் அடித்தார்.

அடுத்து கேப்டன் ஜேசன்

ஹோல்டர் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.   50

ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை மேற்கிந்திய அணி குவித்தது. இந்திய அணியின் தரப்பில் சாஹல் 3 விக்கெட்டையும், ஷமி

மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தற்போது 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களம் இறங்கி உள்ளது.