ஒருநாள் தொடரின் இறுதி போட்டி: டாஸ் வென்ற வெ.இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

5வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

odi

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4 போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிரா ஆனது. இதனால் இன்றைய போட்டி முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.

4வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்ற அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் இடம்பெற்றுள்ளனர். 2வது போட்டி தோல்வி, 3வது போட்டி டிரா ஆனதால் 4வது போட்டியின் போது பார்த்து பார்த்து இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.

அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. அதன்பிறகு 5வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தொடரை வெல்லும் முனைப்போடு இந்திய அணியும், போட்டியை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகின்றன.

எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆஸ்லே நர்ஸ் மற்றும் சந்திரபால் ஹேம்ராஜ் வெளியேற்றப்பட்டு தேவேந்திர பிஷோ மற்றும் ஒசானே தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.