2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பேட்டிங் தேர்வு

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

west

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் சார்துல் தாகூர் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.