திருவனந்தபுரம்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி நிர்ணயித்த 171 ரன்கள் என்ற இலக்க‍ை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.3 ஓவர்களிலேயே 173 ரன்களை எடுத்தது அந்த அணி.

இதன்மூலம், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடர், தற்போது 1-1 என்ற விகிதத்தில் சமனடைந்துள்ளது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்தி அணியில், இம்முறையும் ரோகித் ஷர்மா சொதப்பினார். கடந்தமுறை விளாசிய விராத்கோலி இந்த முறை எடுத்தது வெறும் 19 ரன்களே.

ஷிவம் துபே 54 ரன்களும், ரிஷப் பன்ட் 33 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது இந்திய அணி.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் சிம்மன்ஸ் 67 ரன்களும். லெவிஸ் 40 ரன்களும், பூரான் 38 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்தியா சார்பாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு மட்டுமே தலா 1 விக்கெட் கிடைத்தன.