திரிபுராவில 130 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவா?

அகர்தலா: மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில், கிட்டத்தட்ட 130 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிடும் என நம்பப்படுகிறது.

அப்படி உத்தரவிடப்பட்டால், நாட்டிலேயே இந்த மக்களவைத் தொகுதியில்தான், அதிக வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது என்ற சாதனை பதிவாகும்.

கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது இத்தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது. ஆனால், அதிக வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதால், மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.

இத்தொகுதியில் மொத்தம் 1679 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில், கிட்டத்தட்ட 8% சாவடிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, கிட்டத்தட்ட 130 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்படும் என நம்பப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-