வாஷிங்டன்: வன்முறை செய்வதை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த டிரம்ப் கட்சியின் வர்ஜினியா மாகாண சட்டமன்ற உறுப்பினர்  தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது, இது மேலும் சர்ச்சையை எற்படுத்திஉள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப், வன்முறையை தூண்டு வகையில்ன வீடியோக்களை சமுக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது வைரலான நிலையில், அவரது அதரவாளர்கள் இன்று நாடாளுமன்றத்தை முறையிட்டு, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்தனர்.

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பலர் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி, செனட் அலுவலகத்திற்குள் புகுந்து, அங்குள்ள ஆவணங்களை துக்கி எறிந்து நாசமாக்கினர்.  இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த  நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் முகநூலில் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், டிரம்ப் கட்சியை சேர்ந்த வர்ஜினியா மாகாண சட்டமன்ற உறுப்பினரே ஹெல்மெட் அணிந்துகொண்டு, தாக்குதலை நடத்திய சம்பவமும் அரங்கேறியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், மேற்கு வர்ஜீனியா குடியரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டெரிக் எவன்ஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் பங்கு பெற்ற காட்சிகள் உள்ளன. அவர்கள்  டிரம்ப் உருவப்படம் மற்றும் கட்சி கொடிகள் மற்றும் அடையாளங்களை ஏந்தி ஒரு நுழைவாயிலின் கதவுகள் வழியாக நாடாளுமன்ற கட்டித்திற்குள் புகும் காட்சி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பப்பட்டது.

வீடியோவில் குடியரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், ஹெல்மெட் அணிந்திருப்பதுடன்,  இராணுவ பாணியிலான  உடை அணிந்துள்ளார், அவருக்கு முன்னால் இருந்தவர்கள் கதவைத் தட்டி திறக்கப்படும் கோரப்படுவதில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அதில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது.

அப்போது டெரிக் எவன்ஸ்  “நாங்கள் இருக்கிறோம், நாங்கள் இருக்கிறோம், நாங்கள் இருக்கிறோம், போகலாம், என  கிளர்ச்சியாளர்களின் சுவர் கதவுகளின் வழியாக அங்குலமாக முன்னேறுவதை உற்சாகப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளனர்.

வீடியோவில், “டெரிக் எவன்ஸ் வாஷிங்டனில், நாடாளுமன்ற வளாகத்தில்  இருக்கும் காட்சி தெளிவாக காண்பிக்கப்படுவதாகவும்,  “உள்ளே தேசபக்தர்கள், குழந்தை!” என்று கூச்சலிடுவதும்,  அத்துடன் “U-S-A! U-S-A! U-S-A!” அவரது காட்சிகள் எதிர்ப்பாளர்கள் கட்டிடத்தின் பிரதான தளத்தை எடுத்துக்கொள்வது,  சுற்றி வருவது, கோஷமிடுவது மற்றும் அங்குள்ள  சிலைகளுடன் படங்களை எடுப்பது போன்றவற்றை வெளிப்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் அவர், ஒரு கட்டத்தில்,  மண்டபத்திலிருந்து இறங்கி ஏதோ ஒரு சலசலப்பைக் கத்துகிறார், இன்று இது நடக்கும் என்று யார் நினைத்தார்கள்? ” என்னால் நம்ப முடியவில்லை என்று கூறியவர்,  ஒரு கட்டத்தில், குடியரசுக் கட்சி குழு உறுப்பினர்களிடம் எதையும் சேதப்படுத்த வேண்டாம் என்று கூறுகிறது, “இது எங்கள் வீடு, நாங்கள் அதை மதிக்கிறோம்.” என்று கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால்,  பிரச்சினை பெரிதாக வெடித்த நிலையில், டெரிக் எவன்ஸ் அந்த வீடியோவை தனது  பேஸ்புக் பக்கத்திலிருந்து  நீக்கிவிட்டார், ஆனால் அது பல சமூக ஊடக தளங்களில் மீண்டும் ஏற்றப்பட்டு வைரலாகி வருகிறது.