மேற்குவங்கத்தில் பாஜக தலைவர் ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித் ஷா ரத யாத்திரையை மேற்கொள்ள கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது.

இந்த யாத்திரை மேற்குவங்க மாநிலம் கூச்பெகரில் நாளை தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்த யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி மறுத்து வந்தது.

இந்நிலையில், யாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மாநில அரசின் சார்பில் மதரீதியிலான மோதல்கள் ஏற்படும் என கூறப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.