மேற்கத்திய நாடுகளுக்கு கீழை நாடுகளைக் கண்டு அச்சம் எற்பட்டுள்ளது : மலேசிய பிரதமர்

பீஜிங்

மேற்கத்திய நாடுகளுக்கு கீழை நாடுகளைக் கண்டு அச்சம் உண்டாகி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கூறி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சியை முறியடித்து பிரதமரானவர் மகாதிர் முகமது.    ஊழல் புரிந்த முன்னாள் மலேசிய பிரதமர் மீது இவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகெங்கும் பல நாடுகளை கவர்ந்துள்ளன.   ஐந்து நாள் சுற்றுப்பயணமாக தற்போது சீனாவுக்கு மகாதிர் வந்துள்ளார்.

சீன தொலைக்காட்சிக்கு மகாதிர் அளித்த பேட்டியில், “உலகமயம் என்னும் கருத்தை மேற்கத்திய நாடுகள் இனியும் தூக்கி பிடிக்க முடியாது.  தங்கள் பொருட்களை மற்ற நாடுகளில் விற்க மேலை நாடுகள் உலகமயம் என்னும் கருத்தை உண்டாக்கியது.  தற்போது மேலை நாடுகளில் மற்ற நாடுகளின் பொருட்கள் விற்பனை ஆகின்றன.

அதனால் சீனா போன்ற கீழை நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாக அமெரிக்கா பல புதிய நடவடிக்கைகளை எடுத்துவ் வருகிறது.   தற்போது கீழை நாடுகளில் உற்பத்தி ஆகும் பொருட்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.   கீழை நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்வதால் மேலை நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.