மும்பை

வ் தே புயல் அச்சுறுத்தலால் மேற்கு ரயில்வே இன்று முதல் 21 ஆம் தேதி வரை 50க்கும் அதிகமான ரயில்களை ரத்து செய்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகி உள்ள டவ்தே புயல் இந்தியாவின் மேற்கு பகுதியைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.   இதனால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்து வருகிறது.  தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் மழை பெய்வதால் அப்பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

புயல் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த புயலால் லட்சத் தீவு பகுதிகளில் மிகக் கடுமையான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.  இதையொட்டி லட்சத் தீவில் அகத்தி என்னும் இடத்தில் விமான நிலைய கட்டுமானப் பணிகளை விமான நிலைய ஆணையம் நிறுத்தி உள்ளது.

மேற்கு ரயில்வே டவ்தே புயல் அச்சுறுத்தலால் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் சுமார் 50க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது.  இவற்றில் சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.  சில ரயில்கள் பகுதி அளவு மட்டும் இயக்கப்பட உள்ளன.   பயணிகள் கவனமாக இருக்குமாறும் கூடியவரைப் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.