மும்பை

மும்பை ரெயில்களில் பெண்கள் பெட்டியில் உள்ள படம் நாகரிக இந்திய பெண்ணாக மாற்றப்பட்டுள்ளது.

மும்பை நகர ரெயில்கள் மேற்கு ரெயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ரெயில்களில் பெண்கள் பெட்டியை குறிக்கும் வகையில் ஒரு பெண்ணின் படம் வரையப்படுவது வழக்கமாகும். அவ்வகையில் மும்பை ரெயில்களில் புடவை அணிந்து அந்த முந்தானையை தலையில் முக்காடு அணிந்து நெற்றியில் குங்குமப் பொட்டுடன் உள்ள ஒரு படம் வரையப்பட்டிருக்கும்.

தற்போது நகரத்தில் உள்ள நாகரிகப் பெண்களில் பலர் புடவை அணிவதில்லை. அவ்வாறு புடவை அணியும் பெண்ணும் முந்தானையால் முக்காடு இடுவதும் இல்லை. இதை ஒட்டி மேற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ கே குப்தா இந்த படத்தை தற்போதைய பெண்களின் உருவத்துக்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டும் என எண்ணினார்.

அவருடைய ஆலோசனைக்கு இணங்க மும்பை ரெயில்களில் பெண்களின் படம் நாகரிகப் பெண்ணாக மாற்றப்பட உள்ளது. அத்துடன் பெண்கள் பெட்டியில் சாதனைப் பெண்கள் குறித்த விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட உள்ளன. தற்காலத்திய நகரப் பெண்கள் உருவத்தின்படி படம் மாற்றப்படுவது பெண்கலின் முன்னேற்றத்தை பாராட்டுவதன் அறிகுறி என் பெண் பயணி ஒருவர் தெர்வித்துள்ளார்.