ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்குமா?: தேர்தல் ஆணையம் நாளை இறுதி முடிவு

டில்லி:

ஆர்.கே நகர் இடை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நாளை மாலை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்.கே. நகர் இடை தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து வருமானவரித்துறை சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது லக்கானி, தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் அறிக்கைகளை சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து நஜீம் ஜைதி, ஆர்.கே.நகர் தொகுதிக்கான சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா மற்றும் ராஜேஷ் லக்கானி ஆகியோருடன் நாளை மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்திய பின்னர் தனது முடிவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.