சசிகலா புஷ்பா

அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பலவித சர்ச்சைகளுக்கு ஆளானவர் சசிகலா புஷ்பா. இவருக்கு வரும் மார்ச் 26ம் தேதி ராமசாமி என்பவருடன் திருமணம் நடக்க இருப்பதாக ஒரு அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் உலவுகின்றது.

போயஸ்கார்டனில் ஜெயலிலலிதா,  சசிகலா ஆகியோர் தன்னை தாக்கியதாக பாராளுமன்றத்திலேயே கண்ணீருடன் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா.

திருச்சி சிவாவுடன் இருப்பதாக வெளியான படம்

இவரும், தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அடுதத்தாக  டில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலாபுஷ்பா தாக்கவே, அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில் அ.தி.மு.க.வைவிட்டு நீக்கப்பட்டார்.

அடுத்த சர்ச்சை, அவரது வீட்டு பணிப்பெண்களால் ஏற்பட்டது. பானுமதி என்ற பணிப்பெண், தனது சகோதரி ஜான்சிராணி என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி எஸ்.பியிடம் புகார் அளித்தார். அதில் சசிகலா புஷ்பா மது போதையில் தங்களை துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.  பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்தனர். சசிகலாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ஆகியோர் மீதும் புகார் தெரிவித்திருந்தார்.

இது   தவிர சசிகலா புஷ்பா மீது நெல்லையிலும் பணமோசடி புகார் அளிக்கப்பட்டது.

பிலாலுக்கு கேக் ஊட்டுவதாக வெளியான படம்

இதற்கிடையே அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிலால் என்பவருக்கு சசிகலா புஷ்பா கேக் ஊட்டும் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிலால், “ எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது” என்றார். ஏற்கெனவே சசிகலா புஷ்பாவுக்கு லிங்கேஸ்வர திலகன் என்ற கணவர் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல்நாள், சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் அவருக்காக மனுத்தாக்கல் செய்ய வந்திருக்கிறேன் என்று கூறி லிங்கேஸ்வர திலகன், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் கடுமையாக தாக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வரும் மார்ச் 26ம் தேதி சசிகலா புஷ்பாவுக்கு ராமசாமி என்பவருடன் திருணம் நடக்க இருப்பதாக ஒரு அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சசிகலா புஷ்பா தனுத கணவர் லிங்கேஸ்வர திலகனைவிவாகரத்து செய்துவிட்டதாகவும் அதன் தீர்ப்பு நகல் என்றும் சமூகவலைதளங்களில் ஒரு பதிவு உலவுகிறது.

 

சசிகலா புஷ்பா மீது செக்ஸ் புகார் கூறிய பணிப்பெண்கள்

இது குறித்து விசாரிக்க சசிகலா புஷ்பாவின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, அது சுவிட்ச் ஆப்-ல் இருந்தது.

அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, “சசிகலாபுஷ்பாவுக்கும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவியது. இந்த நிலையில் பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து பெற இருவரும் நீதிமன்றத்தை நாடினர். இந்த நிலையில் விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றனர்.

 

விவாகரத்து தீர்ப்பு

அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, “சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதையடுத்து இருவரும்  பரஸ்பர விருப்பத்தோடு விவாகரத்து செய்து கொள்ள நீதிமன்றத்தை நாடினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து  வழங்கி உத்தரவிட்டுள்ளது” என்கிறது.

 

அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நிகில் என்பவர் எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, “ஜி.. ஜி.. ஜிஜி..” என்று கிண்டலான மறுமொழிகளே வந்தன.

சசிகலா புஷ்பாவின் கணவர் என்று கூறப்படும் லிங்கேஸ்வர திலகன் தாக்கப்பட்டபோது..

இந்த அழைப்பிதழ் குறித்து டில்லி வட்டாரத்தில் விசாரித்தபோது, “மணமகன் ராமசாமி, ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி யுனிவர்சிட்டி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கு லீகல் அட்வைசர் என்று போட்டிருக்கிறார்கள்.   இப்படி ஓர் பதவி இருக்கிறதா என்று தெரியவில்லை” என்றனர்.

தற்போது சமூகவலைதளங்களில் உலாவரும் திருண அழைப்பிதழ்

மேலும், “அழைப்பு விடுப்பவர், அஞ்சலி ராமசாமி என்று இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது”  என்றார்கள்.

அதே நேரம், சசிகலா புஷ்பாவுக்கு நெருங்கிய வட்டாரம், “அவர் விவாகரத்து பெற்றதும் உண்மை. மறுமணம் செய்யப்போவதும் உண்மை” என்கிறது.

சசிகலா புஷ்பாதான் வாய் திறந்து சொல்ல வேண்டும்.