பிரச்சினைகளை சரி செய்து விட்டோம்: ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

நேற்று பிற்பகல் முதல் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் பக்கங்களில் இருந்து  எந்தவொரு புகைப்படத்தையும் பதிவிறக்கமோ, பதிவேற்றம் செய்ய முடியாத நிலை எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விட்டதாக  ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து உள்ளது.

சமூக வலைதள தொழில்நுட்பத்தில் இன்றியமையாததாக மாறி உள்ள வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்கள் நேற்று மாலை முதல் சில பிரச்சினைகளை எதிர் கொண்டன. அதன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவியேற்றமோ, பதிவிறக்கமோ செய்யமுடிவில்லை. இதன் காரணமாக பயனர்கள் பரபரப்படைந்தனர்.

இந்த நிலையில், பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்களின் இணையதளத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதால், ஒரு சில பகுதிகளில் பயனாளர்களால் புகைப்படமோ, வீடியோ பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்னை தற்போது சரி செய்யப் பட்டது. விரைவில் அனைத்து பகுதிக்கும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறோம்.

சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது.