மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் புதிய யோசனைகள்

புதுடெல்லி: ரயில் நிலையங்களில் தேநீர் விற்பனை செய்ய மண் டம்ப்ளர்களைப் பயன்படுத்தி, மண்பாண்ட தொழில்துறையை ஊக்குவிக்கலாம் என்று தான் முன்மொழிந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அகர்பத்தி குச்சிகளுக்கு 30% இறக்குமதி வரி விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

நாக்பூர் மாநகராட்சியால் கட்டப்பட்ட ‘பெண்கள் தொழில்முனைவோர் பவன்’ கட்டடத்தை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், இதை தெரிவித்தார் அமைச்சர் கட்கரி.

மண்பாண்ட தொழில்துறைக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், நாட்டின் 400 ரயில் நிலையங்களில் இந்த மண் டம்ப்ளர்களை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் யோசனை கூறியுள்ளார். இதுகுறித்த முன்மொழிவை அவர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், உள்நாட்டு ஊதுபத்தி உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அகர்பத்தி குச்சிகளுக்கு 30% இறக்குமதி வரி விதிக்கவும் அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.