நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் என்னென்ன? பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தை கடந்த இருநாட்களாக மிரட்டி வந்த நிவர் புயல் அதிகாலை 2.30 மணி அளவில் முற்றிலுமாக கரையை கடந்துள்ள நிலையில், புயல் காரணமாக தமிழகத்தில்  ஏற்பட்டுள்ள சேதங்கள் என்னென்ன? என்ற  விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியதுடன், நேற்று அதி தீவிர புயலாக மாறி  புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கி, நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் என்ன என்பதுகுறித்து  தமிழகஅரசு பட்டியல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி மனித உயிரிழப்பு – 3

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை – 3

சேதமடைந்த வீடுகள் மொத்தம் – 101

ஆடு, மாடுகள் – 26

சாலைகளில் சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கை – 380

மீட்பு முகாம்களின் எண்ணிக்கை 3085

நிவாரண முகாம்களில் தக்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை – 93,030

சாய்ந்தமின்கம்பங்கள் – 19

நிரந்தர மருத்துவ முகாம்கள்  921

நடமாடும் மருத்துவக் குழுக்கள் –  234

மருத்துவப்பயன்பெற்றவர்கள் –  72,421

பயிர் சேதம் – 14 ஏக்கர்.