டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய ஹாக்கி அணிகள் முதலில் சந்திக்கவுள்ள அணிகள் எவை?

--

டோக்கியோ: 2020ம் ஆண்டு ஜப்பான் ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தையும், இந்தியப் பெண்கள் அணி நெதர்லாந்தையும் சந்திக்கவுள்ளன.

2020ம் ஆண்டு ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இடம்பெறும் ஹாக்கி அணிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

தற்போதைய நிலையில் இந்திய ஹாக்கி அணி உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளது. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியுடன், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, ஸ்பெயின், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அடுத்தாண்டு ஜூலை 25ம் தேதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில், இந்திய ஆண்கள் அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி உலகத்தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது. இந்தியப் பெண்கள் அணியும் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை சந்திக்கிறது.