ஆரம்பமானது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – முதல்கட்ட நிலவரங்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் மரியா ஷரபோவா(ரஷ்யா) தோல்வியடைய, ஸ்பெயினின் ரஃபேல் நாடல் வெற்றிபெற்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியுள்ளது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, குரேஷியாவின் டோனா வெகிச்சிடம் தோல்வியடைந்தார். ஷரபோவா, முன்னாள் உலகச் சாம்பியன் ஆவார்.

இவர் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முதல் சுற்றுடன் வெளியேறுவது இது மூன்றாவது மறையாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பொலிவியாவின் ஹியுகோவுடன் மோதிய ஸ்பெயினின் ரஃபேல் நாடல் மோதினார். இதில் நாடல் எளிதாக வென்று, தனது பயணத்தை வெற்றியுடன் துவக்கினார்.

மற்றொரு போட்டியில், சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா வென்றார். இத்தொடரில் கலந்துகொண்ட தமிழக வீரர் குன்னேஸ்வரன் தோல்வியடைந்தார்.