மர்லின் மன்றோ கல்லறை அருகே துயிலப்போகும் ‘பிளேபாய்’ ஹெப்னர்!

பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வயது முதிர்வு காரணமாக  உயிரிழந்தார். அவரது உடல் உலகப்புகழ் பெற்ற  பிரபல கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது மகன் அறிவித்து உள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும்,  ‘பிளேபாய்’ இதழ் உலகம் முழுவதும் இளைஞர்களிடையே பெரும் ஆதரவை பெற்றது.  இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் வெளியாகும்.

இந்த இதழில் படங்கள் வெளியாகவதை ஹாலிவுட் பிரபலங்கள் கவுரமாக நினைக்கிறார்கள்.

முதல் இதழுடன் ஹெப்னர்

1953-ம் ஆண்டில் ஹக் ஹெப்னரால்  தொடங்கப்பட்ட இந்த இதழ்  உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற பெருமையை பெற்றுள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலா கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த பிளேபாய் இதழ் கடந்த 2015-ம் ஆண்டு முதல்  இதழ் தனது அட்டை படத்தில் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது

உயிரோடிருந்தபோது பிளேபாய் மாளிகையின் அந்தப்புரத்தில் இன்பத்தில் திளைத்திருந்த பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெப்னர், இறந்த பின்னும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை மரிலின் மன்ரோ கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார்.

இவரது இதழின் அட்டைப்படத்தை முதன்முதலில் அலங்கரித்தவர் மர்லின் மன்றோவின் புகைப்படம்தான். அதன் காரணமாக பிளேபாய் இதழின் புகழும் உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், தனது 91 வயதில் இறந்த ஹெஃப்னர் தனது உடல் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டிருந்தார். அதன்படி,   1992- ம் ஆண்டே மர்லின் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே தன்னை புதைப்பதற்காக ஒரு இடத்தை வாங்கி வைத்திருந்தார்.

இதுகுறித்து அவர் ஏற்கனவே ஊடகங்களுக்கு கூறியபோது, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெஸ்ட்வுட் வில்லேஜ் நினைவு பூங்காவில் திரை பிரபலங்களான நடாலியா வுட், டீன் மார்ட்டின் மற்றும் ஃபரா ஃபாவ்செட்டும் ஆகியோர் உட்பட தன்னுடைய பல நண்பர்கள் அடக்கம் செய்யபட்டு இருக்கிறார்கள்.  தனது இறப்புக்கு பிறகு, தனது உடலையும் அங்கே அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும், தனக்கு இதுபோன்ற உணர்வுகளில் அதிக நம்பிக்கை உண்டு என்றும், எனது இறப்புக்கு பிறகான காலத்தை  மர்லின் மன்றோ  அருகில் செலவிடும் இனிமையான வாய்ப்பை தவிர்க்க முடியாது என்று கூறியிருந்தார்.

தற்போது, இவர் இறந்துவிட்ட நிலையில் மர்லின் மன்றோவின் கல்லறைக்கு அருகில் உறங்கவிருக்கிறார்.