‘நில வேம்பு’ குறித்து முழுமையான தகவல்கள்: சித்தமருத்துவ நிபுணர் மாலதி

மிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, சித்த மருத்துவ மூலிகையான நிலவேம்பு கசாயம் குடிக்க மருத்துவர்களும், அரசும் வற்புறுத்தி வருகிறது.

இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தும், கிட்னி பாதிக்கும் என்றும் பரபரப்பாக மாற்றுக்கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

எந்தவொரு நோய்க்கும்  நிவாரணமும் எளிதில் கிடைப்பதில்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. உடனடி நிவாரணங்கள் தேவைப்படுவோர் அலோபதி மருத்துவத்தை நாடுகிறார்கள். ஆனால் பக்கவிளைவு அல்லாத சிறிதுசிறிதாக குணம் வேண்டுவோர் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்கள்… எந்தவித மாறுக்கருத்தும் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருந்து கை கொடுக்காததால், சித்த மருந்தை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மற் றும் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப் பட்டு வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயம் (குடிநீர்) கொடுக்கப்படு கிறது. இதன் மூலம் காய்ச்சல் குறைவதுடன் ரத்த தட்டணுக்க ளும் அதிகரிக்கின்றன. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப் புகளும் தடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், நிலவேம்பு எனப்படும் தாவரத்தின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து காரணமாக நமது ரத்தத்தில் உள்ள, நோய் எதிர்ப்பு சக்திக்கான பிலேட்கள் அதிகரித்து வருகிறது என்பது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்த நில வேம்பு கசாயத்தில் என்னென்ன உள்ளன… அதனால் என்ன நிவாரணம் கிடைக்கும் என்பது இப்போது பார்க்கலாம்….

நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகை மற்றும் ஒருசில பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படு கிறது.  நிலவேம்பு கசாயம் தயாரிக்க பயன்படும் பொடி நிலவேம்பு என்ற செடியின் அனைத்து பகுதிகளுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிலவேம்பு முழுவதும் மருத்துவப்பயன் கொண்டது. கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் மாலதி பவுன்ராஜ் B.S.M.S.,MD (siddha) கூறியதாவது,

இதை மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொண்டால்,  நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும், புத்தி தெளிவு உண்டாகும், மலமிளக்கும், தாதுக்களைப் பலப்படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் விட்டு, விட்டு வரும் காய்ச்சலைக் குறைக்கும், பசியை உண்டாக்கும். விட்டு, விட்டு வரும் காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாட்கள் சாப்பிட்டால் பலன் தெரியும்.

இந்த கசாயம் காய்ச்சப்பட்டு 3 மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அப்போதுதான் அதன் பலன் நமக்கு கிடைக்கும்.

டெங்கு – தெரிந்துகொள்வது  எப்படி….

பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் வருவதாக அறிகுறி தெரிந்ததும் நிலவேம்பு கசாயத்தை பருகுங்கள். காலை மாலை இரண்டு வேளைகளிலும் பருகலாம்.

சிறியவர்களுக்கு, 15 – 30 மில்லியும்,  பெரியவர்கள் 50 மில்லி குடிக்கலாம். காய்ச்சல் ஏற்பட்டவர்கள் அசைவ உணவுகளும், இனிப்பு வகைகளையும் தவிர்த்து,  அரிசி கஞ்சி போன்ற உணவு சாப்பிடலாம். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக தண்ணீரை சுடவைத்து நன்றாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை குடிப்பது நன்று. மேலும் சீரகத்தண்ணீரும் குடிக்கலாம். தண்ணீர் அதிக அளவு எடுத்துக்கொள்வது மிக்க பலனை தரும்.

தொடர்ந்து  3 நாட்கள் பருகியும் காய்ச்சல் தொடர்ந்தால்,உடனே மருத்துவமனை அணுகி, ரத்த தட்டணுக்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.

இதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், பப்பாளி இலைச்சாறு அல்லது ஆடாதோடை இலைச் சாறு குடிக்கலாம்.

மேலும்,  நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் யாருக்கும் எந்தவித  விளைவுகளும் ஏற்படாது. 

நிலவேம்பு கசாயத்தை முறையாக எப்படி தயாரித்து குடிப்பது எப்படி என்பது குறித்து சித்த மருத்துவர்கள் கூறுவதை பார்க்கலாம். 

நிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோறைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும்.

5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் காய்ச்சலை குணப்படுத் துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும்.

உதாரணமாக,  நிலவேம்பு பொடி 10 கிராம், 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.  இந்த நீர்  50 மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இது ஒரு நபருக்கான அளவு.

அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட கசாயத்தை 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். அதற்கு மேல் அதில் வீரியம் இருக்காது. அதன்பின் குடித்தால் எந்த பலனும்  கிடைக்காது. எனவே ஒவ்வொரு வேளைக்கும் கசாயத்தை புதிதாக தயாரித்து குடிப்பதே நல்லது.

எப்போது சாப்பிட வேண்டும்…

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்துக்கு முன்பு நிலவேம்பு கசாயம் பருகினால் நல்லது. பெரியவர்கள் 30 மிலி முதல் 50 மிலி வரையும், 1 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 மிலி முதல் 10 மிலி வரையும் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் கசப்பாக இருப்பதால் குழந்தைகள், சிறுவர்கள் குடிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள். கசாயத்தை குடித்த பிறகு அவர் களுக்கு தேன், பனை வெல்லம், ஆடாதோடை மணப்பாகு போன்ற வற்றை கொடுக்கலாம். ஆனால் கசாயத்துடன் இவற்றை கலந்து கொடுக்கக்கூடாது.

காய்ச்சல் குறைந்த பிறகு கசாயம் குடிப்பதை நிறுத்திவிடலாம். அதன்பின் குடித்தாலும் தவறு ஒன்றும் இல்லை. நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக் கிறது. சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

அலோபதி மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் சித்த மருந்தான நிலவேம்பு காரணமாக எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

இப்படி சாப்பிடக்கூடாது

நிலவேம்பு பொடியை ஒருசிலர் கூறுவதுபோல வெந்நீரில் கலந்து குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால் பலன் இல்லை. அதுபோல நிலவேம்பு பொடியை வாயில் போட்டு விழுங்கவும் கூடாது. இவ்வாறு செய்வதால் அதற்குரிய பலன் கிடைக்காது.

சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு வகையான மூலிகைகள் உட்கொள்வதற்கும் ஒவ்வொருவகையான முறைகள் உள்ளது. அதன்படி பயன்படுத்தினால் மட்டுமே அதற்கான பலன்கள் கிடைக்கும். அதன்படி நிலவேம்பு பொடியை கசாயமாகத் தான் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதை தவிர்க்கலாமே….

பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள குழந்தைக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது தாய்ப்பாலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியே குழந்தைக்கு போதுமானது. அதனால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயத்தை கொடுக்க வேண்டாம்.

நிலவேம்பு மாத்திரை –  போலி

நிலவேம்பு பொடி, மாத்திரை வடிவில் கடைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி இதுவரை அதிகாரப்பூர்வமாக தயாரிக்க அரசு அனுமதிக்கவில்லை. அதற்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், நிலவேம்பு மாத்திரை என்பது போலி. அதனை யாரும் வாங்கி சாப்பிட வேண்டாம்.

சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

சர்க்கரை நோயாளிகள் தாராளமாக  நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். ஒருசிலர் சொல்வதுபோல், சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறுவது  தவறான தகவல்.

சித்த மருந்து எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சர்க்கரை நோயாளிகள் தாராளமாக நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். எந்த பாதிப்பும் இருக்காது. சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்

நிலவேம்பு எங்கு கிடைக்கும்?

நிலவேம்புப் பொடியில் நிலவேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிட்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற ஒன்பது விதமான மூலிகைகள் உள்ளன. இவை அனைத்தும் திப்பியாக அரைக்கப்பட்டு ‘நிலவேம்புப் பொடி’யாகக் கிடைக்கிறது.

நிலவேம்பு பொடி தமிழகத்தின் எல்லா அரசு மருத்துவ மனைகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. சித்த மருத்துவ கடைகளில் விற்கப்படுகிறது.

இவர்கள் நிலவேம்பு கசாயம் குடிப்பதை தவிர்க்கலாம்…

காய்ச்சல் காரணமாக,  தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடித்தால் நல்லது.

வீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

மேலும் சந்தேகம் ஏற்படுபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நிலவேம்பு கசாயகம் குடிப்பது நலம்.

கார்ட்டூன் கேலரி