‘2.0’  படத்தில் இருந்து நீக்கப்பட்ட, மியூட் செய்யப்பட்டக் காட்சிகள் என்னென்ன?

ஜினி நடிப்பில் நாளை (நவம்பர் 29) வெளியாக இருக்கும்  ‘2.0’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகிறது. நாயகியாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார்.   ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. .

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள 2.o படம், தமிழகம் தாண்டி இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. . 3டி படமான இதில் கிராபிக்ஸ் காட்சிகள் பல இடம்பெற்றிருக்கின்றன.

இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு  ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. அதே நேரம்  சில காட்சிகளை  நீக்கியதோடு, சில வார்த்தைகளும் மியூட் செய்யப்பட்டுள்ளது. அவை பற்றி பார்ப்போம்.

இது ஒரு கற்பனையே என்று பொறுப்புத் துறப்பு வரும் வாசகத்தில், ஆராய்ச்சிக்கான தேதி ஆதாரம் குறிப்பிட வேண்டும். எனவே பழைய பொறுப்புத் துறப்பு வாசகத்தை நீக்கிவிட்டு, புதிய பொறுப்புத் துறப்பு வாசகம் சேர்க்கப்பட்டது.

ரீல் 2-ல் 119-வது ஷாட்டில் இடம்பெற்ற யூனிசெல் என்ற வார்த்தை நீக்கப்பட்டது. (அவதூறு என்பதால்).

ரீல் 3-ல் ஷாட் எண் 57-ல் வயிற்றிலிருந்து செல்போன் வருவதாகக் காட்டப்பட்ட காட்சி நீக்கப்பட்டது. தவிர  ரத்தம் வருவது போன்ற காட்சியும் வன்முறையாக இருக்கிறது என்பதால் இருள்படுத்தப்பட்டது.

ரீல் 4-ல் ஷாட் எண் 125-ல் இடம்பெற்றுள்ள கேன்சர் என்ற வார்த்தை முதல், கருச்சிதைவு அதிகமாகும் என்ற வசனத்தில் உள்ள கேன்சர், ஆண்மைக் குறைவு, கருச்சிதைவு போன்ற வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. (விஞ்ஞானத்துக்குப் புறம்பானது என்பதால்).

ரீல் 5ல் வரும் லஞ்சத்தை என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டது.  இதே ரீலில் 45 வருஷம் என்ற வார்த்தையும் மாற்றப்பட்டது.  .

ரீல் 5-ல் சப்டைட்டிலில் வரும் 9 என்ற வார்த்தை நீக்கப்பட்டது.

 

 

கார்ட்டூன் கேலரி