சென்னை:
மிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  18ந்தேதிகள் முதல் பேருந்துகள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  இயக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பஸ் பயணம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து பதில் அளிக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கி உள்ளதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பேரழிவை சந்தித்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொழிற்சாலைகள், போக்குவரத்துக்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது, இந்த மனுமீது நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, , தமிழக அரசு ஏற்கனவே பொது போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு, பஸ் பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துள்ளது? என்பது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை  ஜூன் -1ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.