திறக்கப்பட்ட அலுவலகம், தொழில்நிறுவனங்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

டெல்லி:

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிவப்பு மண்டலம் அல்லாத பகுதிகளில் ஊரட்ங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி திறக்கப்பட்டுள்ள அலுவலகங்கள், தொழில்நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,

பணிபுரியும் இடங்களில் வெப்பநிலைமானி, முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவை போதிய அளவில் இருக்க வேண்டும்.

பணி சுழற்சி மற்றும் உணவு இடைவேளைக்கு போதிய சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்

போக்குவரத்தில் போதிய சமூக இடைவெளி உறுதி செய்ய வேண்டும் 

என தெரிவிக்கப்பட்டு உள்ளது.