என்னென்ன தளர்வுகள்? நாளை முடிவு செய்யப்படும் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி:
த்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்தது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.மேலும், செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது மத்திய அரசு.குறிப்பாக அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்களும் ஊரடங்கை அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அரசின் நடவடிக்கைகள் பயனளிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.