உங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது திமுக…..

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தயாரிக்கப்பட இருக்கும், தேர்தல் அறிக்கை யில் பங்குபெறும் வகையில்,  உங்களது கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை எங்களுக்கு தெரிவியுங்கள் என்று திமுக தலைமை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழநாட்டை முன்னேற்று வதில், பங்கேற்க ஒரு வாய்ப்பு என்றும், உங்கள் புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொள்ள எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு, வரும் 28ந்தேதிக்குள் எங்களுக்கு அனுப்புங்கள் அதற்கான இமெயில் முகவரியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மெயில் முகவரி:

dmkmanifesto2019@dmk.in 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: DMK demanding public opinion, dmk manifesto2019, dmkmanifesto2019@dmk.in, Parliamentary election manifesto, prepare election manifesto, your expectations, திமுக தேர்தல் அறிக்கை, நாடாளுமன்ற தேர்தல், பொதுமக்கள் கருத்துக்கள்
-=-