புதுடில்லி: அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை நிர்மாணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் மத்திய அரசால் ஒரு அறக்கட்டளை உருவாக்குவது தொடர்பாக, மத்திய கலாச்சார அமைச்சகம் அதன் பொறுப்பேற்பு அமைச்சகமாக இருக்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் வழியாக தெரிய வருகிறது.

அரசாங்கத்தின் ஆலோசகர்கள் 1045 பக்க தீர்ப்பை படித்தறிந்த பின்னர், எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய பிரதமர் அடுத்த வாரம் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களுக்குப் பிறகுதான் அறக்கட்டளை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளில் பலர், அறக்கட்டளையானது, சோம்நாத் அறக்கட்டளையைப் பின்பற்றலாம், அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் உறுப்பினர்களாக உள்ளனர். சோம்நாத் அறக்கட்டளையில் மொத்தம் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர்.

மீதமுள்ளவர்களில் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் குஜராத் முதல்வர் கேசுபாய் படேல், ஓய்வுபெற்ற குஜராத் தலைமைச் செயலாளர் பிரவீன் லஹேரி, தொழிலதிபர் ஹர்ஷவர்தன் நியோட்டியா மற்றும் பேராசிரியர் ஜீவன்பாய் பர்மர் ஆகியோர் அடங்குவர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பில், மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை வகுக்கப்பட வேண்டும் என்று கூறியது. “இந்த தீர்ப்பின் தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுக்கலாம் … இந்தத் திட்டம் ஒரு அறங்காவலர் குழு அல்லது வேறு பொருத்தமான அமைப்புடன் ஒரு அறக்கட்டளையை அமைப்பதைக் குறிக்கும்” என்று தீர்ப்பு கூறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் அறங்காவலர்களைத் தேர்ந்தெடுப்பது, விதிகள் மற்றும் அறங்காவலர்களின் அதிகாரம் ஆகியவை மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அறங்காவலர்களின் அதிகாரமானது கட்டுமானம் மற்றும் “தேவையான, தற்செயலான மற்றும் துணை விஷயங்கள்” ஆகியவைகளில் அடங்கும்.

தீர்ப்பின் பின்னர் சனிக்கிழமையன்று மத்திய கலாச்சார அமைச்சர் பிரஹ்லாத் படேல் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், அந்த இடத்தைப் பற்றிய இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) அறிக்கை வெளியிடப்பட வேண்டும். “இந்த அறிக்கை இப்போது உச்ச நீதிமன்றத்தின் சொத்தாக நின்றுவிடும், எனவே எங்கள் எதிர்கால சந்ததியினருக்காக மத்திய அரசு ஒரு புத்தகத்தை வெளியிடும்”, என்று படேல் கூறினார்.

அமைச்சக அதிகாரிகள் மேலும் கூறுகையில், அமைச்சகத்திற்குள் ராமருக்கான ஒரு அருங்காட்சியகம் தொடர்பான விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இடத்தைத் தோண்டும்போது ஏ.எஸ்.ஐ. கண்டுபிடித்த பழங்கால பொருட்கள் காட்சிக்கு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் அதிகப்படியான வரத்தை எதிர்பார்த்து, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகங்கள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளன. தீர்ப்பிற்கு முன்னர், இந்த பகுதியை ஒரு பாரம்பரிய தளமாக அறிவிக்கும் திட்டத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. புதிய கோயில்கள், 100 வருடங்களுக்குக் குறைவான கோயில்கள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்கள் என மூன்று பிரிவுகளாக கோயில்களை அமைச்சகம் தரம் பிரித்து வருகிறது.

“கோவில் கட்டமைப்பிலிருந்து 12 சதுர கிலோமீட்டருக்கு வெளியே கோயிலைச் சுற்றி புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தில் அமைச்சகம் செயல்படும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.