Random image

சென்னையின் புதிய ஜில் பருவநிலை – வானிலை ஆய்வு மையம் கூறுவதென்ன?

சென்னை: மேகமூட்டத்துடன் கூடிய வானமும், இனிய தென்றலுடன் கூடிய கால நிலையும் திங்கட்கிழமை வரை தொடரும் என்றும், லேசான மழையும் இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரப்பதம் நிறைந்த வலுவான காலநிலை கடற்கரைப் பகுதியில் நிலவுவதால், இந்த ரம்மிய சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனால், பகல் நேரத்தின்போது, வழக்கத்தைவிட வெப்பநிலை குறைவாக இருக்கும் மற்றும் இரவுநேரத்தில், வழக்கத்தைவிட இரண்டு அல்லது மூன்று டிகிரி அளவிற்கு வெப்பநிலை கூடுதலாகி, இரவுநேரம் வெதுவெதுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

“வானம் பாதியளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு இருக்கும்” என்ற வானிலை ஆய்வு மைய தகவல் கூறுகிறது.