ஆறுமுகசாமி ஆணையத்தில் ராதாகிருஷ்ணன் கூறியது என்ன? ராஜா செந்தூர்பாண்டியன்

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருண்ணன் ஆஜரானபோது என்ன கூறினார் என்பது குறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

இன்று விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அவரிடம் ஜெ.சிகிச்சை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஆணையம், அவரை மீண்டும் வரும் 18ந்தேதி விசாரணைக்கு ஆஜராக கூறி உள்ளது.

இந்த நிலையில், விசாரணை ஆணையத்தில் ராதாகிருஷ்ணனிடம் நடைபெற்ற விசாரணை குறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். அப்பபோது,  ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது நேரில் பார்த்தது மற்றும் கண்ணாடி வழியாக பார்த்தது தொடர்பான தகவல்களை அவர் ஆணையத்தில் தெரிவித்தாக கூறினார்.

மேலும், ஆணையத்தின் நீதிபதி, ஏன் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அவசியம் ஏற்படவில்லை எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை குறித்த கேள்வி மிகுந்த வேதனை அளிப்பதாக ராதாகிருஷ்ணன் கூறியதாவும், மருத்துவமனையில்  யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதையும்  அவர் தெரிவித்தார் என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.

கூறியது என்ன?