அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு: அனில் மாதவ் தவே உயில் சொல்வது என்ன?

டில்லி,

த்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று திடீரென காலமானார். அவருக்கு வயது 60.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார். அவருக்கு வயது 60.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழக சட்டத்திருத்ததிற்கு ஆதரவாக செயல்பட்டவர் அனில்தவே என்பது மறக்க முடியாதது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அனில்தவே திருமணமாகாத பிரம்மச்சாரி.

அவரது மறைவு பாரதியஜனதா கட்சியினர் மட்டுமின்றி நாட்டு மக்களிடையேயும் அனுதாபத்தை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், தற்போது அவர் எழுதியிருந்த உயில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உயில் அவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி எழுதியுள்ளார். சுமார் 5 வருத்திற்கு முன்பே தனது மரணம் நிகழ்ந்தால், அதன்பிறகு செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி தெளிவாக எழுதியுள்ளார் அனில் தவே.

அவரது உயில் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் எழுதியுள்ள உயிலின் சாராம்சம் என்ன? அப்படி என்னதான் எழுதியுள்ளார் என்பதை சற்றே பார்க்கலாம்…

உயிலில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவை:

எனது மரணத்துக்கு பின்னர் இறுதிச்சடங்குகள் எளிய முறையில் நடத்தப்படவேண்டும்…

எனக்கு யாரும் நினைவுச்சின்னம் எழுப்பாதீர்கள்..

என் பெயரில் விருதுகள் வழங்க வேண்டாம்…

என்னையும், என் பணிகளையும் கவுரவிக்க விரும்பினால் மரக்கன்றுகளை நடுங்கள்… 

அவை உயிர்வாழ உதவுங்கள்..

நதிகளையும், அவற்றின் கிளைநதிகளையும் பாதுகாக்க உழையுங்கள்.. இவற்றைக் கூட என் பெயரால் செய்யக்கூடாது..

-இதுதான் அவரது உயில் வாசகங்கள்..

 

அவர் எழுதி வைத்துள்ள உயிலை படிப்பவர்களின் கண்களை  கலங்க வைத்துள்ளது.

நமது நாட்டில் இப்படி ஒரு அரசியல்வாதியா என கேள்விக்கணைகளை எழுப்ப வைக்கிகறது.

இன்றைய அரசியல்வாதிகள்… குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் அவா.

Leave a Reply

Your email address will not be published.